புதன், 7 ஜூன், 2023

பதிவு - 3

             நான் கல்லூரியில் படிக்கும் போது எனக்கு மூக்கில் நீர் வடியும் தொந்தரவு இருந்தது. பைக்கில் சென்றாலோ அல்லது தூசி காற்றை சுவாசித்தாலோ மூக்கில் இருந்து நீர் வடியும். கண்களில் அரிப்பு ஏற்படும். பிறகு நானே மெடிக்கல் ஷாப்பில் ஒரு மாத்திரையை வாங்கி சாப்பிடுவேன். பிறகு இரண்டு நாட்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது.

        சிறிது மாதம் கழித்து குளிர்ந்த காற்று வீசினாலோ அல்லது அதிக வெப்பத்தில் நின்றாலோ இதே தொந்தரவு மீண்டும் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு சென்ற போது இது டஸ்ட் அலர்ஜி என்று கூறினார்கள். சிறிது காலம் அதற்கான மருந்து மாத்திரைகளை சாப்பிட்டேன். பிறகு கல்லூரி படிப்பு முடிந்ததும் வேலைக்கு சென்றேன். வேலைக்கு சென்ற பொழுது பெரிய  அளவு தொந்தரவுகள் எதுவும் இல்லை.

                 பிறகு துபாய்க்கு வேலைக்கு சென்றேன். அங்கு சென்றதும் மீண்டும் இதே தொந்தரவு அதிகமானது. நட்சத்திர ஹோட்டலில் ரெஸ்டாரன்ட் மேனேஜராக வேலை செய்தேன். அதனால் மீண்டும் மருந்து மாத்திரைகள் அதிகமாக எடுத்துக் கொண்டேன். ஒரு கட்டத்தில் இந்தியாவிற்கே மீண்டும் திரும்பி வரும் சூழல் உருவானது.

         இங்கு வந்தும் இதே தொந்தரவுகள் தொடர்ந்தன. அப்பொழுதுதான் அக்குபங்சர் மருத்துவத்தை உறவினர்கள் மூலமாக தெரிந்து கொண்டேன். அன்று முதல் அக்குபங்சர் மருத்துவத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டேன். தொடர்ந்து ஆறு மாதங்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டேன்.அதன் பிறகு என்னுடைய தொந்தரவு முழுமையாக நீங்கியது.

                வாழ்வியல் முறையில் மாற்றங்கள், அக்குபங்சர் சிகிச்சை இவற்றின் மூலமாக  இன்று வரை எந்த மருந்து மாத்திரை இன்றி சுகமாக வாழ்கிறேன்.

                          நன்றி.

 

பதிவு எண்: 3

பி.எஸ்.முகம்மது அலி, கொடைக்கானல்.

பதிவு - 4

       என் மகனுக்கு பிறந்தது முதலே இழுப்பு நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தான்.   இழுப்பு நோய் வந்தவுடன் செய்வதறியாது இரவு பகல் பார்க்காமல் ...