புதன், 7 ஜூன், 2023

பதிவு - 4

     என் மகனுக்கு பிறந்தது முதலே இழுப்பு நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தான்.  இழுப்பு நோய் வந்தவுடன் செய்வதறியாது இரவு பகல் பார்க்காமல் ஆஸ்பத்திரிக்கு தூக்கி செல்வோம்.

    டாக்டர் அவனுக்கு ஊசி போட்ட பிறகுதான் அந்த இழுப்பு நிக்கும்.

    இழுப்பு நோய் குணமாவதற்கு டோப்போமாக், வால்பாரின் மருந்து மாத்திரைகளை டாக்டர் கொடுக்கச் சொன்னார். பிறகு ஜுரம் வந்தால் இழுப்பு வரும் அதனால் ப்ரிசியம் மாத்திரையை ஜுரம் வந்தவுடன் போடச் சொன்னார். 

    டாக்டர் சொன்ன மாத்திரைகளை தவறாமல் கொடுத்தும் கூட இழுப்பு நோய் குணமாகவில்லை. மாத்திரை கொடுத்தும் இழுப்பு வந்து கொண்டுதான் இருந்தது.  குறைந்தது ஒரு மணி நேரம் கூட இழுப்பு நீடிக்கும். 

    ஒரு நாள் மீண்டும் என் மகனுக்கு அதிகமாக இழுப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்ய வேண்டி வந்தது.  அப்போது எங்கள் குடும்ப நண்பர் என் மகனை பார்க்க வந்தார்.  நாங்கள் மகனுக்காக படும் மன உளைச்சலைப் பார்த்து அக்குபங்சர் மருத்துவத்தை அறிமுகப்படுத்தினார். 

    அக்குபங்சர் ஒரு மருந்தில்லா மருத்துவம் என்றும், எல்லா நோய்களும் குணமாகும் என்பதைச் சொன்னார்.  இதைக் கேட்டவுடன் மகிழ்ச்சியாகவும், மருந்தில்லாமல் குணமாகிறது என்றவுடன் ஆச்சர்யமாகவும் இருந்தது.

என் மகனை அக்குஹீலரிடம் கூட்டிச் சென்று சிகிச்சை எடுத்தோம். அவர் நாடி பார்த்து, தொடுதல் மூலம் சிகிச்சை அளித்தார்.  எந்த மருந்து மாத்திரையும் எடுக்க வேண்டாம் சரியாகிவிடும் என்று சொன்னார். 

மருந்து மாத்திரை ஏதுமின்றி தொடு சிகிச்சை மூலம் எப்படி குணமாகும் என்று தோன்றியது.  சிகிச்சை எடுக்க எடுக்க அக்குபங்சர் சிகிச்சை மீது நம்பிக்கை ஏற்பட்டது. இப்போது என் மகன் அக்கு சிகிச்சையில் தான் இருக்கிறான்.

எப்போதாவது என் மகனுக்கு இழுப்பு நோய் வரும்.  அதுவும் ஒரு ஐந்தோ பத்து நிமிடம் வந்து போகும்.  அக்குபங்சர் சிகிச்சையால், முன்பைவிட இப்போது என் மகனிடம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. 

இப்போது என் மகன் எந்த மருந்து மாத்திரையும் இல்லாமல் இருக்கிறான்.  எங்களுக்கும் அக்கு சிகிச்சையில் புரிதல் ஏற்பட்டு நோயின் பயமில்லாமல், மன அமைதியுடன் வாழ்கிறோம்.

-       சிந்துமுருகன், குரோம்பேட்டை, சென்னை.

பதிவு - 4

       என் மகனுக்கு பிறந்தது முதலே இழுப்பு நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தான்.   இழுப்பு நோய் வந்தவுடன் செய்வதறியாது இரவு பகல் பார்க்காமல் ...