புதன், 7 ஜூன், 2023

பதிவு - 2

எனக்கு சிறு வயது முதலே அடிக்கடி தலை வலி வரும். எப்படியும் மாதம் ஒரு முறை கட்டாயமாக தலைவலி வந்துவிடும். பள்ளி நாட்களில் தலைவலி வரும்போது எல்லாம் அன்று விடுமுறை எடுத்து விடுவேன். தலைவலிக்காக பல  மருத்துவர்களிடம் சென்று காண்பித்தேன். நாளைக்கு 10 முதல் 12 மாத்திரைகள் வரை எனக்கு கொடுத்தனர். ஆனாலும் தலைவலி அவ்வப்போது வந்து கொண்டே தான் இருந்தது. இது எனக்கு பெரும் தொந்தரவாகவே இருந்தது. உடலில் அடிக்கடி பித்த நீர் சுரந்து கொண்டே இருக்கும். தலைவலி அதிகமாகி குமட்டலுடன் வாந்தியாக கசப்பு தன்மையுடன் மஞ்சள் நிறத்தில் வெளியேறும். பின்பு தலைவலி குறைய தொடங்கும் ‌. மறுபடியும் ஓரிரு வாரங்களில் இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கும். தலைவலி வரும்போது எல்லாம் மாத்திரைகளை போட்டு தலைவலியை அடக்கி கொள்வேன்.

               பின்பு எனக்கு அடுக்கு தும்மல் வந்து கொண்டே இருக்கும். அதிகாலையில் எழுந்தவுடன் 20 முதல் 30 தும்மல் வரை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். இந்த பிரச்சனை எனக்கு வெகு நாட்களாகவே இருந்து வந்தது. அப்போது அக்குபங்சர் மருத்துவம் பற்றி எனக்கு எந்த ஒரு புரிதலும் கிடையாது. என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர் அக்குபஞ்சர் மருத்துவம் பயின்று பயிற்சி செய்து கொண்டு இருந்தார். அப்போது அவர் என்னை பார்த்து  அக்குபங்சர் சிகிச்சை எடுத்துக் கொள். தொந்தரவுகள் சரியாகிவிடும் என்று கூறினார். சிகிச்சை எடுத்த ஒரு சில மாதங்களிலே எனக்கு தொந்தரவுகள் குறைந்தன.

             பின்பு நீண்ட நாட்களுக்கு பிறகு எனக்கு சிறுநீர் கழித்தவுடன் சிறுநீர் பாதை வழியாக சுமார் அரை டம்ளர் அளவுக்கு இரத்தம் வெளியாகும். இது ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும் போது வெளியானது . எனவே எனக்கு பயத்தை உண்டாக்கியது. நான் ஆங்கில மருத்துவரிடம் சென்று காண்பித்தேன். ஸ்கேன் எடுக்க சொன்னார்கள். ஸ்கேன் ரிப்போர்ட்டில் சுமார் 14  mm அளவிற்கு Prostate பகுதியில் பகுதியில் சிஸ்ட் இருப்பதாகவும் அதனை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என்றும் கூறினார். ஸ்கேன் ரிப்போர்ட்டை வைத்து இரண்டு மூன்று ஆங்கில மருத்துவர்களிடம் காண்பித்தேன் அவர்களும் இதையே கூறினர். ஸ்கேன் ரிப்போர்ட்டை வைத்து சித்த மருத்துவமனிடம் சென்று காண்பித்தேன். அவரும் சித்த மருத்துவத்தில் இதற்கு மருந்து இல்லை எனவே ஆங்கில மருத்துவரிடம் சென்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளுங்கள் என்று கூறினார். 

            பின்பு அக்குபங்சர் பயின்ற என்னுடைய சகோதரர்களிடம் இது  பற்றி கூறும் போது, அவர்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின் அதே இடத்தில் இது போன்ற வேறு ஒரு கட்டி உருவாகாது என்ற உத்தரவாதத்தை தர மாட்டார்கள். அப்படியே அறுவை சிகிச்சை செய்து கொண்டாலும் கட்டி கேன்சர் கட்டியாக இருந்தால் என்ன செய்வது அது உடல் முழுக்க பரவிவிடும் என்று கூறினார். அப்போது அவர்களிடம் இதற்கு தீர்வு தான் என்ன என்று கேட்டேன். அக்குபங்சரில் முழுமையாக சிகிச்சை எடுத்துக்கொள். கட்டி தானாக கரைந்து விடும் என்று எனக்கு நம்பிக்கை அளித்தனர். முழு நம்பிக்கையுடன் அக்குபங்சரில் சிகிச்சை எடுத்துக் கொண்டேன். உணவிலும் அவர்கள் கூறியது போல் கட்டுப்பாட்டுடன் இருந்து கொண்டேன். சிகிச்சையில் சுமார் மூன்று மாதகால அளவில் கட்டி உடைந்து சிறுநீர் பாதை வழியாக வெளியேறுவதை என்னால் உணர முடிந்தது. அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு என்று கூறிய மற்ற மருத்துவங்களை விட அறுவை சிகிச்சை இன்றி அக்குபங்சர் சிகிச்சை மூலம் என்னுடைய தொந்தரவு சரியானது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. இன்று வரை இது தொடர்பான எந்த தொந்தரவுகளும் இல்லாமல் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகிறேன். எல்லா நோய்க்கும் ஆங்கில மருத்துவ மட்டுமே தீர்வு என்ற எண்ணத்துடன் இருக்கும் என்னை போன்றவர்களின் மனநிலையை அக்குபங்சர் மருத்துவம் மாற்றி எல்லா நோய்களையும் அறுவை சிகிச்சை இன்றி மருந்து மாத்திரைகள் இன்றி குணப்படுத்த முடியும் என்ற எண்ணத்தை கொடுத்துள்ளது. இந்த மருத்துவ முறை ஒவ்வொரு எளிய பாமர மக்களுக்கும் போய் சேர வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம்.  

-    சா.அகமது முகைதீன்சென்னை.

பதிவு - 4

       என் மகனுக்கு பிறந்தது முதலே இழுப்பு நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தான்.   இழுப்பு நோய் வந்தவுடன் செய்வதறியாது இரவு பகல் பார்க்காமல் ...